Home Featured நாடு 4 பில்லியன் டாலர் விசாரணையில் நஜிப் மீது சந்தேகம் இல்லை – சுவிஸ் ஓஏஜி அறிவிப்பு!

4 பில்லியன் டாலர் விசாரணையில் நஜிப் மீது சந்தேகம் இல்லை – சுவிஸ் ஓஏஜி அறிவிப்பு!

528
0
SHARE
Ad

Najib 1MDBகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமான அந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர் பரிமாற்றத்தில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மீது எந்த சந்தேகமும் இல்லை என சுவிட்சர்லாந்து  தெரிவித்துள்ளது.

“சுவிட்சர்லாந்து தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (Office of the Attorney-General in Switzerland – OAG) நடத்தி வரும் இந்தக் குற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டில் இருக்கும் பொது அதிகாரிகளில் திரு.நஜிப் ரசாக் ஒருவர் அல்ல” என நேற்று சுவிஸ் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் சார்பில் அதன் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவர் ஆண்ட்ரே மார்டி தெரிவித்துள்ளார்.

ஓஏஜி கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் 1எம்டிபி அதிகாரிகள் மற்றும் ‘மற்றொரு அடையாளம் தெரியாத நபர்’ ஆகியோருக்கு எதிராகத் தனது குற்றவியல் விசாரணைகளைத் திறந்தது.

#TamilSchoolmychoice

தற்போது இந்த சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றத்தில் அந்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டுபிடிக்கவே மலேசியாவின் உதவியை நாடி வருகின்றத் சுவிஸ்.

சுவிஸ் சட்டங்களை மீறி மலேசியாவிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையில்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள 4 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஆதாரங்களை விரைவில் மலேசியாவிடம் ஒப்படைக்கவுள்ளது சுவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.