Home Featured இந்தியா மும்பை அருகே சோகம்: கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலி!

மும்பை அருகே சோகம்: கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலி!

534
0
SHARE
Ad

421137-murud-beach-deathsமும்பை – புனே ஆபேதா இனாம்தார் கல்லூரியைச் சேர்ந்த 143 மாணவர்களும், 11 பேராசிரியர்களும் சுற்றுலா சென்றிருக்கின்றனர்.

நேற்று மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு வந்த அவர்கள் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர். அப்போது மாணவ, மாணவிகள் கடலில் குளிக்க விரும்பியுள்ளனர்.

அந்த சமயத்தில் கடல் உள்வாங்கி இருந்ததால் அலை அவ்வளவாக இல்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென கடல் நீர்மட்டம் உயர்ந்து, 4 மாணவர்களை இழுத்துச் சென்றுள்ளது.

இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அவர்களைக் காப்பாற்ற கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது மற்றொரு ராட்சத அலை ஒன்று வந்து அவர்களையும் இழுத்துக் கொண்டுள்ளது. இதனால் கரையில் இருந்த மாணவர்கள் கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளனர்.

இதைக்கேட்டு, அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் சென்று மாணவ, மாணவிகளை மீட்கப் போராடினர்.

எனினும், 14 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்து போயுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த 4 பேரை மீனவர்கள் மீட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் சில மாணவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதனால் தற்போது அங்கு கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.