Home Featured தமிழ் நாடு அழகிரி மீண்டும் திமுகவில் இணைவார் என்பது வதந்தி – ஸ்டாலின் பதில்!

அழகிரி மீண்டும் திமுகவில் இணைவார் என்பது வதந்தி – ஸ்டாலின் பதில்!

581
0
SHARE
Ad

Azhagiri-vs-Stalinசென்னை – திமுக -வில் மீண்டும் அழகிரி இணையவுள்ளதாக அண்மையில் வெளியான தகவல்களை திமுக பொருளாளர் ஸ்டாலின் மறுத்துள்ளார்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சென்னை கோயம்பேடு பகுதி வாழ் மக்களுடன் இன்று கலந்துரையாடிய ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அழகிரி மீண்டும் இணைவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவை வெறும் வதந்தி என்று பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மூன்று நாட்களுக்கு முன்னர் இதே கேள்வியை திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அங்கிருந்த மைக்குகளைத் தட்டிவிட்டு கோபத்தில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.