Kuala Lumpur – ஆஸ்ட்ரோ ஷா தயாரிப்பில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வெளிவந்துள்ள, “ஒலாபோலா” (“OlaBola”) திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் வாரத்தின் இறுதியில் 2.5 மில்லியன் ரிங்கிட் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
முதல் சில நாட்களிலேயே படத்தைப் பார்த்தவர்கள் டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் வெளியிட்ட விமர்சனங்கள் படம் சிறப்பாக இருப்பதாக புகழப்பட்டதால், படத்தைப் பார்க்கும் இரசிகர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரி டான், ‘ஒலாபோலா’ வசூல் வெற்றி குறித்து வெளியிட்ட அறிக்கையில் ” இந்தப் படம் வெறும் காற்பந்து பற்றிய படம் மட்டுமல்ல. மலேசியர்கள் என்ற முறையில் நாம் யார் என்பதைக் காட்டும் ஒரு கண்ணாடி. எதிர்மறையான சூழ்நிலைகளில் நாம் ஒன்றித்து எப்படி விளையாடி வெற்றி பெறுகின்றோம் என்பதை இப்படம் காட்டுகின்றது. 1980ஆம் ஆண்டுகளின் நினைவுகளை நமக்குக் கொண்டு வருவதோடு, இரசிக்கத்தக்க பல நகைச்சுவைக் காட்சிகளையும், உணர்ச்சியமயமான காட்சிகளையும் இந்தப் படம் கொண்டிருக்கின்றது. உயர்தர தயாரிப்பு, சிறந்த இசை, அற்புதமான ஒளிப்பதிவு ஆகிய அம்சங்களுக்காகவும் இந்தப் படம், பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.
படத்தில் கோல்கீப்பர் முத்துவாக நடிக்கும் சரண்குமார் மனோகரன்….
“இத்தகைய ஒரு காலத்திற்கேற்ற படத்திற்கு ஆதரவு தந்துள்ள இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்களும், குடும்பத்தோடும், நண்பர்களோடும் வந்து பார்த்து, ஏன் இந்தப் படம் இன்று வசூல் ரீதியாகவும், தர அளவிலும், முதல் நிலையைப் பெற்றுள்ளது என்பதைக் கண்டு மகிழ வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்” என்றும் ஹென்ரி டான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் சில முக்கியக் கதாபாத்திரங்களில் தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர்.
ஆர்டிஎம் தமிழ் வானொலியில் காற்பந்து நேர்முக வர்ணனையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏஎம்ஆர் பெருமாள்…
இந்தப் படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் விவரங்கள் பெற விரும்புவோர் கீழ்க்காணும் இணையத் தளங்களில் தொடர்பு கொள்ளலாம்:-