Home Featured நாடு பதவி விலகுவதாக அறிவித்தார் முக்ரிஸ்!

பதவி விலகுவதாக அறிவித்தார் முக்ரிஸ்!

787
0
SHARE
Ad

mukrizஅலோர் செடார் – கெடா மந்திரி பெசார் விவகாரத்தில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் நெருக்கடிகளுக்குப் பிறகு, முடிவாகப் பதவி விலக ஒப்புக் கொண்டுள்ளார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர்.

இது குறித்து சற்று நேரத்திற்கு முன்பு விஸ்மா டாருல் அமானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், மாநில சட்டமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னுடைய தோள்களில் இருந்த மிகப் பெரிய சுமை ஒன்று விலகியதாக உணர்கிறேன்” என்று கூறியுள்ள முக்ரிஸ் தனக்கு அரசாங்க வழங்க முன்வந்த துணையமைச்சர் பதவியையும் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, கெடாவின் புதிய மந்திரி பெசார் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் கெடா மாநில செயலாளர் டத்தோ பக்கார் டின் அறிவிக்கவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.