தேசிய முன்னணியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் அகமட் பாட்ஷாவின் பெயரை கெடா அரசப் பேராளர்கள் மன்றத்திடம் பரிந்துரைத்ததாக மலாய் மெயில் பத்திரிக்கைக்கு நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி அம்மாநில அம்னோ உறுப்பினர்களுடன் சேர்ந்து எதிர்ப்புக் குரல் தெரிவித்தவர் தான் இந்த அகமட் பாட்ஷா.
அதன் பின்னர், பிரதமருடன் சந்திப்புக் கூட்டங்களையும் நடத்தி தங்களது கோரிக்கைகளை முன் வைத்தார் அகமட் பாட்ஷா.
இந்நிலையில், அப்பதவிக்கு அவரது பெயரே முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.