Home Featured நாடு சுவிட்சர்லாந்திற்கான மலேசிய தூதர் மரணம் – நஜிப் இரங்கல்!

சுவிட்சர்லாந்திற்கான மலேசிய தூதர் மரணம் – நஜிப் இரங்கல்!

634
0
SHARE
Ad

ambassador2கோலாலம்பூர் – சுவிட்சர்லாந்து நாட்டிற்கான மலேசிய தூதர் மொகமட் சுல்கிப்ளி மொகமட் நோர் நேற்று காலமானார்.

இந்தத் தகவலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

“அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை 6.38 மணியளவில் காலமானார்.

கடந்த 1984-ம் ஆண்டு தூதரக சேவையில் இணைந்த மொகமட் சுல்கிப்ளி, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டிற்கான மலேசிய தூதுவராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.