Home Featured நாடு இந்த நிலைமை எனக்கும் நேர்ந்தது – முக்ரிசுக்கு சாஹிட் அறிவுரை!

இந்த நிலைமை எனக்கும் நேர்ந்தது – முக்ரிசுக்கு சாஹிட் அறிவுரை!

643
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகியுள்ள டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், அம்னோவின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் நிலைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டுமென துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1998 -ம் ஆண்டு தானும் இதே போன்ற நிலையை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அதிலிருந்து மீண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் மலேசிய செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே ஹமிடி தமது கருத்துக்களை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

“அச்சமயம் நான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றேன். அதன் பின்னர் சுற்றுலாத்துறையின் துணை அமைச்சராக 2004 பொதுத்தேர்தலுக்குப் பின் நியமிக்கப்பட்டேன்.”

“நாம் வருத்தத்தில் இருக்கும்போதோ, கோபத்திலோ எத்தகைய முடிவையும் எடுக்கக் கூடாது. ஏனெனில் அவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள். மாறாக அத்தகைய தருணங்களில் அமைதி காப்பதுடன், நடப்பவற்றை ஏற்க வேண்டும்,” என்று சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

எப்போதும் கட்சியின் ஒற்றுமைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுமென குறிப்பிட்ட அவர், தாம் சார்ந்துள்ள மாநிலம் மற்றும் தேசத்தின் அரசியல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியம் என்றார்.

பழைய மற்றும் புதிய தலைவர்கள் அனைவரும் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் நலன் கருதி கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ள வேண்டும் என்றும் ஒட்டுமொத்தத்தில் தேசத்தின் நிலைத்தன்மையை மனதிற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கெடாவின் புதிய மந்திரி பெசாராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அகமட் பாஷாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஹமிடி மேலும் கூறினார்.