Home Featured கலையுலகம் “பீப்” பாடல் சர்ச்சைக்குப் பிறகு வெளியே தலைகாட்டிய நடிகர் சிம்பு! ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்!

“பீப்” பாடல் சர்ச்சைக்குப் பிறகு வெளியே தலைகாட்டிய நடிகர் சிம்பு! ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்!

772
0
SHARE
Ad

சென்னை – “பீப்” பாடல் சர்ச்சை இப்போது சற்றே ஓய்ந்ததுபோல் தோன்றினாலும், அது தொடர்பான புகார்களும், நீதிமன்ற வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். திரை உலகை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் சிம்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிம்புக்கு சமூக வலைத் தளங்களில் இரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர்.

Simbu-birthday-குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடும் சிம்பு…(டுவிட்டர் படம்)

#TamilSchoolmychoice

தனது பிறந்த நாளுக்கு முதல் நாள் இரவு தனது அப்பா,அம்மா தம்பி,தங்கையுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். சிம்புவின் பிறந்தநாளை அறிந்த சில ரசிகர்கள் சிம்புவின் வீட்டிற்கே வந்து பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினர்.

ரசிகர்கள் தனது இல்லத்தின் முன்னே இரவு வேளை பாராது குழுமியுள்ளதை அறிந்த சிம்பு வெளியே வந்து நள்ளிரவில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனால் ரசிகர்கள்  உற்சாகம் அடைந்தனர்.

சிம்புவின் அடுத்த படமான ‘இது நம்ம ஆளு’ தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான இசை வெளியீடும் நேற்று நடைபெற்றுள்ளது.