Home Featured இந்தியா பெங்களூரில் வெளிநாட்டு மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது!

பெங்களூரில் வெளிநாட்டு மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது!

911
0
SHARE
Ad

tansaniya girl attackபெங்களூரு – கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான்சானியா நாட்டு மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி, தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், கார் மோதி இறந்தார். அதனைக் கண்ட பொதுமக்களில் சிலர் அந்தக் காரை அடித்து நொறுக்கி தீ வைத்ததோடு, அதில் இருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், அக்காரில் இருந்த 21 வயதான தான்சானியா நாட்டு மாணவி ஒருவரை, காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்ட சிலர், அவரது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்தத் தாக்குதல் வெட்கப்படவேண்டிய ஒன்று என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமர்சித்துள்ளார்.