Home Featured உலகம் இந்தோனேசியாவில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கலாம் – அறிக்கை தகவல்!

இந்தோனேசியாவில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கலாம் – அறிக்கை தகவல்!

785
0
SHARE
Ad

jakartaகோலாலம்பூர் – வட்டார தலைமைத்துவத்திற்கு பல்வேறு தீவிரவாத குழுக்கள் போட்டியிடுவதால், இந்தோனேசியாவில் இன்னும் அதிகமான தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜகார்த்தாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திங் டேங் குழு தகவல் அளித்துள்ளது.

சிரியாவில் இருக்கும் இந்தோனேசிய இஸ்லாமிய மாநிலம் (IIS) போராளிகள், வட்டாரத்திற்கு யார் தலைமையேற்பது? என தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்சில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக ஐபேக் (Institute for Policy Analysis of Conflict) தெரிவித்துள்ளது.

இதனால் இந்தோனேசியாவில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

 

 

Comments