Home Featured தமிழ் நாடு வைகோவையும் திமுகவுக்கு அழைத்த ஸ்டாலின்!

வைகோவையும் திமுகவுக்கு அழைத்த ஸ்டாலின்!

610
0
SHARE
Ad

stalinசென்னை – மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் திமுகவுக்கு வரலாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மதிமுக இப்போது காலியாகிவிட்டது என்று பொருள்படும்படி பேசினார்.

“மதிமுகவில் இப்போது ஒருவர் மட்டுமே உள்ளார். எனவே வைகோவும் திமுகவில் சேரலாம். அவரை திமுகவில் ஏற்றுக்கொள்வீர்களா என்று சிலர் கேட்கலாம். எத்தகையவரையும் எந்தச் சூழ்நிலையிலும் மன்னித்து ஏற்கக்கூடியவர் திமுக தலைவர் கலைஞர். அவர் வைகோவையும் மன்னித்து ஏற்பார். கலைஞருக்கு அத்தகைய மனம் உண்டு” என்று மு.க.ஸ்டாலின் திருமண விழாவில் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக மதிமுகவிலிருந்து பலர் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். இதையடுத்து மதிமுகவை அழிக்க திமுக தலைமை முயற்சி செய்வதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் மதிமுக காலியாகிவிட்டது என்றும், வைகோ தனித்து நிற்பதாகவும் பொருள்படும்படி மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது மதிமுக வட்டாரங்களில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு வைகோ மிக விரைவில் பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.