Home Featured உலகம் ஜெர்மனி: இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் பலி – சுமார் 81...

ஜெர்மனி: இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் பலி – சுமார் 81 பேர் காயம்‏

660
0
SHARE
Ad

Train crash in Bavariaபெர்லின்- 150 பேர் பயணம் செய்த, இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 18 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்கானதோடு, மேலும் 63 பேர் காயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் இந்த விபத்து பவாரியா மாநிலத்தில் நிகழ்ந்தது. இச்சமயம், முனிச் நகரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பேட் அய்ப்பிளிங் என்ற இடத்தில் இரு ரயில்களும் மோதிக் கொண்டன.

இந்த விபத்துக்கான காரணம், மனிதத் தவறு என்று மட்டும் இப்போதைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

a

மீட்புக் குழுவினர் மூட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் காட்சி…..

மீட்புப் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டதாக பவாரியா மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் மார்டின் வின்க்ளர் தெரிவித்துள்ளார்.   விபத்தையடுத்து அந்த ரயில் பாதையும் அருகே உள்ள உள்ளூர் சாலைகள் இரண்டும் மூடப்பட்டன.

விபத்தில் சிக்கிய இரு ரயில்களின் பல பெட்டிகள் தடம்புரண்டுக் கவிழ்ந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கிய பல பயணிகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர்.

“காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்கள், சிறு படகுகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறோம்,” என மார்டின் மேலும் கூறினார்.

இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அல்லது மனிதத் தவறால் நிகழ்ந்ததா? என்பது குறித்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.