Home Featured நாடு அன்வாருக்கு வயசாகிவிட்டதா? – நூருல் இசா கூறுவது என்ன?

அன்வாருக்கு வயசாகிவிட்டதா? – நூருல் இசா கூறுவது என்ன?

822
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – அன்வாருக்கு வயசாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவரை எதிர்கட்சிகளின் தலைவர் என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட முடியாது  என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான நூருல் இசா அன்வார் தெரிவித்துள்ளார்.

அன்வார் சிறைக்குச் சென்று 1 ஆண்டு ஆகிவிட்டதை குறிக்கும் வகையில், நேற்று சுங்கை பூலோ சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் கூடினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நூருல் இசா, “அன்வாருக்கு வயதாகிவிட்டது. இனி புதிய தலைவர்களுக்கான நேரம் வந்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் 74 வயதான பெர்னி சண்டெர்ஸ் தான் ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்விற்கு எதிராகப் போராடி வருகின்றார்.”

#TamilSchoolmychoice

“அவரால் முடியும் என்றால், ஏன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு (எதிராக) இளையோரை களமிறக்க வேண்டும்?” என்று நூருல் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்கட்சியை வெற்றிக்குக் கொண்டு செல்ல இன்னும் தனது தந்தையால் முடியும் என்றும் கூறும் நூருல், மக்கள் தங்களது கடமைகளை மட்டும் செய்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.

“எனவே, மரியாதைக்குரிய பெண்களே, ஆண்களே, எனது அன்பிற்குரிய நண்பர்களே, வெற்றியாளர்களைப் போல் இப்போதே தயாராகுங்கள், கடினமான உழைப்பைக் கொடுங்கள். இந்த நாடு நமக்குச் சொந்தமானது, பிரதமருக்கு மட்டும் சொந்தமானது அல்ல” என்றும் நூருல் குறிப்பிட்டுள்ளார்.