Home Featured வணிகம் ‘புரோட்டோனை வாங்குங்கள் இல்லையேல் மலேசியா தோல்வியுற்ற நாடாக மாறும்’

‘புரோட்டோனை வாங்குங்கள் இல்லையேல் மலேசியா தோல்வியுற்ற நாடாக மாறும்’

684
0
SHARE
Ad

mahathirprotonகோலாலம்பூர் – புரோட்டோன் கார் உள்ளிட்ட உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால், தோல்வியுற்ற மூன்றாம் உலக நாடாக மலேசியா மாறும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டுக் கார்கள், வெளிநாட்டு பொருளாதார வளர்ச்சிக்குத் தான் உதவும் என்றும் புரோட்டோன் நிறுவனத்தின் ஆலோசகருமான மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலை, இறக்குமதித் தயாரிப்புகளை வாங்க இயலாத நிலைக்கு மலேசியர்களைக் கொண்டு சென்றுவிடும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“உள்ளூர் நிறுவனங்கள் யாவும் மூடப்பட்டுவிட்டதாக வைத்துக் கொள்வோம், அப்போது ஒரு சிலரால் மட்டுமே வெளிநாட்டு கார்களை வாங்க இயலும். அது மலேசியாவை தோல்வியுற்ற மூன்றாம் உலக நாடாக மாற்றிவிடும்”

“நீங்கள் உள்ளூர் கார்களை வாங்கினால், பணப்புழக்கம் நமது நாட்டிற்குள்ளேயே இருக்கும். அதனால் தொழிலாளர்கள் பணம் ஈட்டுவார்கள், விநியோகஸ்தர்கள், முகவர்கள் மற்றும் அவர்களின் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இதனால் உள்ளூர் பொருளாதாரம் உயரும். ஆயிரக்கணக்கான மக்கள் நலமுடன் வாழ்வார்கள்” என்று மகாதீர் நேற்று தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.