ஜாகர்த்தா – வெள்ளிக்கிழமை (12 பிப்ரவரி) 6.5 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கியதாக அமெரிக்க பூகம்பவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை.
உள்நாட்டு நேரம் மாலை வெள்ளிக்கிழமை 5.02 மணியளவில் தாக்கிய அந்த நிலநடுக்கம் சும்பா வட்டாரத்தைச் சேர்ந்த, அண்டிகாந்தோர் என்ற இடத்தில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியதாகவும் அந்த மையம் அறிவித்திருக்கின்றது.
இதுவரை உயிருடற் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக புகார் எதுவும் இல்லை என அறிவித்துள்ள இந்தோனேசிய அதிகாரிகள், நிலநடுக்கம் உலுக்கிய பகுதி மிகவும் உட்புறத்தில் உள்ள பகுதி என்பதால் அங்கு தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.