Home Featured உலகம் தமிழர்களின் கதாநாயகன் பிரபாகரன்: ஒப்புக் கொண்டார் கோத்தாபய!

தமிழர்களின் கதாநாயகன் பிரபாகரன்: ஒப்புக் கொண்டார் கோத்தாபய!

850
0
SHARE
Ad

prabakaran-tamil tigersகொழும்பு – இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மட்டுமே கதாநாயகனாகக் கருதினர் என இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைய பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது சிங்கள ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Gotabaya-rajapakse-sri lanka“பிரபாகரனை தமிழ் மக்கள் தங்களுடைய கதாநாயகனாகக் கொண்டாடினர். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. எனவேதான் போருக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலின்போது, வடக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இலங்கையின் வடக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது தமிழ் மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். எனவே அங்குள்ள மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் திகழ்ந்தார்” என கோத்தாபய (படம்) அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும் பிரபாகரனை அவர் கதாநாயகன் என வர்ணித்திருப்பதே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.