Home Featured நாடு ஜேபி செண்டரலில் இருந்து செகாமட் வரையில் இரயில் ஓட்டிய ஜோகூர் சுல்தான்!

ஜேபி செண்டரலில் இருந்து செகாமட் வரையில் இரயில் ஓட்டிய ஜோகூர் சுல்தான்!

709
0
SHARE
Ad

JB04_140216_SULTAN JOHORஜோகூர் பாரு – எப்போதும் மக்களோடு மக்களாக மிக எளிமையாக இருக்க விரும்புபவர் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார்.

அவ்வப்போது சாலையோர உணவுக்கடைக்குள் நுழைந்து தேநீர் அருந்துவது, தனியாக மோட்டாரில் ஜோகூரை வலம் வந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவது என அவரது செயல்பாடுகள் ஜோகூர் வாசிகளிடையே மிகவும் பிரபலம்.

இந்நிலையில், நேற்று ஜோகூர் பாரு செண்டரல் இரயில் நிலையத்தில் இருந்து செகாமட் நிலையம் வரை 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு இரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

இது போல் இரயில் ஓட்டுவது அவருக்குப் புதிது கிடையாது. இதற்கு முன்பு 8 முறை இவ்வாறு இரயில் ஓட்டியுள்ளார். கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி, செகாமட்டிலிருந்து ஜோகூர் பாரு இரயில் நிலையம் வரை ஓட்டிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சுல்தான் இரயில் ஓட்டுகையில், அவருக்கு கேடிஎம்பியைச் சேர்ந்த (Keretapi Tanah Melayu Bhd – KTMB) 10 முதல் 20 வருட இரயில் ஓட்டும் அனுபவம் பெற்ற இரண்டு ஊழியர்களான மொகமட் கமால் அஸ்மாவி மற்றும் சுப்பாவி இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு, ஜூன் 28-ம் தேதி, கிளாஸ் 26 லோகோமோட்டிவ் என்ற ஓட்டுநர் உரிமத்தை ஜோகூர் சுல்தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: நன்றி (The Star)