அண்மையில் ஆயர் ஈத்தாம் சுங்கச்சாவடி அருகே நடந்துள்ள இந்த சம்பவத்தின்போது உதை வாங்கும் பெண்மணியை, அவரது மகள் என்று நம்பப்படும் ஒரு சிறுமி, கட்டியணைத்துக் காப்பாற்ற முயற்சிக்கும் நெகிழ்ச்சிக்குரிய காட்சியும் அந்தக் காணொளியில் காணப்படுகிறது.
சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்தக் காணொளி குறித்து விசாரணை நடத்தி வருவதாக பத்துபகாட் ஓசிபிடி உதவி ஆணையர் தின் அகமட் கூறியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பிட்ட அச்சம்பவம் ஆயர் ஈத்தாமில் தான் நடைபெற்றது என்பதை உறுதி செய்தார்.
“இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடத்துவோம்,” என்றார் தின் அகமட்.
இந்தக் காணொளிக் காட்சி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று முகநூலில் இடம்பெற்றது முதல் இதுவரை 2.59 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். மேலும் 3600 பேர் அதை பிறருடன் பகிர்ந்துள்ளனர்.
இதே வேளையில், தாக்குதலுக்கு ஆளான பெண்ணைக் காப்பாற்றாமல் அந்தச் சம்பவத்தை காணொளியாகப் பதிவு செய்தது பொறுப்பற்ற செயல் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.