இந்நிலையில், நண்பர்களான அவர்கள் நால்வரின் சடலங்கள் இன்று கோத்தா திங்கி அருகே உள்ள ஆற்றில் காருடன் மீட்கப்பட்டுள்ளது.
நால்வரின் சடலங்களும் அழுகிய நிலையில், காருக்குள் இருக்க, கார் ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லக்மன் ஜைனி, அபு இசானி அபு பக்கர், நிக் ஷகிர் சுபாயிரி மற்றும் முகமட் அஸ்யரப் இசா என்ற அந்த நான்கு பேரும் 21 வயது நிரம்பியவர்கள் ஆவர்.
கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, இரவு 9.30 மணியளவில் அவர்கள் நால்வரும் ஹோண்டா அக்கார்டு வகை காரில் ஸ்ரீஆலமில் இருந்து புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments