சான் ஜோஸ் – தற்போது அமெரிக்காவிற்கு தொழில் நிமித்தம் பயணம் மேற்கொண்டுள்ள கமலஹாசன், அங்கு தனது சகோதரர் சந்திரஹாசன் மற்றும் அவரது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கமலஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன். மற்றொரு மூத்த சகோதரர் சந்திரஹாசன் கமலஹாசனுடன் சினிமா மற்றும் தொழில் விவகாரங்களில் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றார்.
குறிப்பாக, விஸ்வரூபம் பட விவகாரங்களில் முன்னணிக்கு வந்து செயலாற்றியவர் ஒரு வழக்கறிஞரான சந்திரஹாசன். தற்போது அவரும் கமலுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு சந்திரஹாசனின் புதல்வர் நிர்மல் ஹாசன் மற்றும் அவரது பேரனும் நிர்மல் ஹாசனின் புதல்வருமான சித்தார்த் ஹாசன் ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத்தான் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது அமெரிக்கப் பயணத்தின்போது கமல் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார்.
பின்னர், கூகுள் நிறுவனத்திற்கும் வருகை தந்து அங்குள்ளவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.