Home Featured வணிகம் கோளாறான பாகத்தை மாற்றிக் கொடுக்க 95,000 கார்களுக்கு புரோட்டோன் அழைப்பு!

கோளாறான பாகத்தை மாற்றிக் கொடுக்க 95,000 கார்களுக்கு புரோட்டோன் அழைப்பு!

594
0
SHARE
Ad

proton-logoஷா ஆலம் – புரோட்டோன் கார்களில் எஞ்சின் அதிக சூடாவதற்குக் காரணமாக இருக்கும் கோளாறான சிஎப்இ எண்ணெய் குளிரூட்டிகளை (CFE oil cooler hoses) மாற்றிக் கொடுக்கவுள்ளதாக புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, கிட்டத்தட்ட 95,000 புரோட்டோன் கார்களை திரும்ப அழைத்து, கோளாறான அந்தப் பாகத்தை மாற்றிக் கொடுக்கவுள்ளது.

அந்தப் பட்டியல் படி, 59,663 (Exora), 28,642 (Preve), 6,290 (Suprima) வகைக் கார்களுக்கு சிஎப்இ எண்ணெய் குளிரூட்டிகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என புரோட்டோன் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அப்துல் ஹாரித் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு விடும் என்றும், 40,000 கிலோமீட்டருக்கு மேல் ஓடிய கார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோளாறான இந்தப் பாகத்தின் விலை 17 ரிங்கிட் தான் என்றாலும், புரோட்டோன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக சுமார் 2 மில்லியன் ரிங்கிட் செலவு செய்து வாடிக்கையாளர்களுக்கு அதை செய்து கொடுப்பதாகவும் அப்துல் ஹாரித் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புரோட்டோன் சேவை மையங்களை அணுகி, வாரண்டி மூலமாக அந்தப் பாகத்தை மாற்றிக் கொள்ளும்படியும் அப்துல் ஹாரித் குறிப்பிட்டுள்ளார்.