Home Featured தமிழ் நாடு “திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” – நக்மா அறிவிப்பு!

“திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” – நக்மா அறிவிப்பு!

729
0
SHARE
Ad

Nagmaசென்னை – காங்கிரஸ் தலைமை அனுமதித்தால், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று கிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா அறிவித்துள்ளார்.

திமுக விரும்பும் பட்சத்தில் அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த முகப்பேரில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நக்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ்-தி.மு.க. ஏற்கனவே வெற்றி கூட்டணி, அதை மீண்டும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நிருபிப்போம்.” என்று சூளுரைத்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் – திமுக கூட்டணி குறித்து விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, வியாபம் ஊழல் மற்றும் லலித் மோடி விவகாரங்களை மறந்து விட்டு பேசுவதாக நக்மா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என அதிகாரப்பூர்வமாக முடிவாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.