Home Featured தமிழ் நாடு கட்சிக்காக பல முறை சிறை சென்றவன் நான் – அழகிரி பதிலடி!

கட்சிக்காக பல முறை சிறை சென்றவன் நான் – அழகிரி பதிலடி!

588
0
SHARE
Ad

azhagiri-karunanidhiசென்னை – திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மு.க.அழகரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என,என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும்.”

“இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது.”

#TamilSchoolmychoice

திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கையில்லாதது என்று அழகிரி கூறிய கருத்துக்கு, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். அழகிரியை அலட்சியப்படுத்துங்கள் என்றும் தமது கட்சி உறுப்பினர்களுக்குக் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.அழகிரி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.