Home Featured உலகம் துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு – 5 பேர் கொல்லப்பட்டனர்! 10 பேர் காயம்!

துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு – 5 பேர் கொல்லப்பட்டனர்! 10 பேர் காயம்!

860
0
SHARE
Ad

Explosion in Ankaraஅங்காரா – அண்மையக் காலமாக தொடர்ந்து பயங்கரவாத சம்பவங்களைச் சந்தித்து வரும் துருக்கி நாட்டில் மற்றொரு குண்டு வெடிப்பு நேற்று நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அங்காராவில் இராணுவ வாகனம் ஒன்றைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் ஆகாயப் படை தலைமையகத்திற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. துருக்கி நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடமும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையில்தான் உள்ளது.

#TamilSchoolmychoice

Explosion in Ankara

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல் துறையினர் துரிதமாக பணியில் இறங்கும் காட்சி

சம்பவம் நடந்த அந்த இடத்தைச் சுற்றி கரும் புகையும் நெருப்புப் பிழம்புகளும் சூழ்ந்தன என்றும் பேருந்து ஒன்றும் தீப்பற்றிக் கொண்டது என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்திற்கான காரணங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக துருக்கி நாட்டின் பிரதமர் அகமட் டாவுதோக்ளு (Ahmet Davutoglu) அலுவலகம் தெரிவித்துள்ளது.