கௌதம் மேனன் படத்திற்குப் பின்னரே வெற்றி மாறனின் “வடசென்னை” படத்தில் நடிக்கவிருக்கின்றார். இதற்கிடையில் ஆங்கிலப் படம் ஒன்றிலும் அவர் நடிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தோட்டா படத்தில் நடிக்கவிருப்பது குறித்த தகவல்களை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில், ஜீவன் நடிப்பில் ‘தோட்டா’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் சில ஆண்டுகளுக்கு, வெளிவந்திருப்பதால், தனுஷின் படப் பெயர் பின்னர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.