Home Featured நாடு டாக்டர் சுகுமாறனை கண்டுபிடித்தது காவல்துறை – புடுராயாவில் பாதுகாப்பாக உள்ளார்!

டாக்டர் சுகுமாறனை கண்டுபிடித்தது காவல்துறை – புடுராயாவில் பாதுகாப்பாக உள்ளார்!

721
0
SHARE
Ad

doctor-parliament2கோலாலம்பூர் – மாயமானதாக நம்பப்பட்ட நாடாளுமன்ற மருத்துவமனையின்  மருத்துவர் பி.சுகுமாறன், புடுராயாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பாதுகாப்பாக இருப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது.

மாநகர குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த துணை ஆணையர் டத்தோ சைனுதின் அகமட் கூறுகையில், அவர் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் அங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் திடீரென மாயமானதில் எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லை என்பதையும் சைனுதின் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, பத்துமலையில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் சுகுமாறன் தங்கி இருந்ததாகவும், அவரது பொருட்கள் அங்கு இருந்தது என்றும் காவல்துறை தகவல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.