Home Featured நாடு கோலாலம்பூர் தலைமைப் போலீஸ் அதிகாரியாக அமார் சிங் நியமனம்!

கோலாலம்பூர் தலைமைப் போலீஸ் அதிகாரியாக அமார் சிங் நியமனம்!

927
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று கோலாலம்பூர் மாநகரின் தலைமை போலீஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் அமார் சிங், மூன்றாவது தலைமுறையாக காவல் துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெருமைக்குரிய குடும்பத்துக்காரர் ஆவார்.

கமிஷனர் எனப்படும் ஆணையர் பதவியோடு கோலாலம்பூரின் தலைமைப் போலீஸ் அதிகாரி பொறுப்பை ஏற்கின்றார் அமார் சிங் (படம்).

AmarSingh-police-pix-பல்லாண்டுகளாக காவல் துறையில் ஈடுபட்டு வரும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய உயர் அதிகாரி பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறையாகும்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் துணை ஆணையர் 1 என்ற பதவி அந்தஸ்தோடு, சந்தோக் சிங் என்பவர் சிலாங்கூர் மாநில தலைமைப் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியிருக்கின்றார்.

அமார் சிங்கின் தாய்வழி தாத்தாவான பச்சான் சிங் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியிருக்கின்றார். பின்னர் அமார் சிங்கின் தந்தை இஷார் சிங்கும் போலீஸ் துறையில் இணைந்தார்.

இதன் வழி மூன்றாவது தலைமுறையாக காவல் துறை பணிகளில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார் அமார் சிங்.

அமார் சிங் சிறந்த கல்வித் தகுதிகளையும் கொண்டவராவார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் பிஎஸ்.சி பட்டம் பெற்ற அமார் சிங், போலீஸ் துறையில் பணியாற்றும் போது சட்டத்துறை பட்டப் படிப்பை இலண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தார்.

வழக்கறிஞராகத் தொழில் புரிவதற்கான சர்ட்டிபிகேட் இன் லீகல் பிராக்டிஸ் (Certificate in Legal Practice) என்ற தகுதிச் சான்றிதழ் படிப்பையும் அவர் நிறைவு செய்துள்ளார்.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் குற்றவியல் நீதித் துறையிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அனைத்துல இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் ஷாரியா எனப்படும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கான டிப்ளமா படிப்பையும் அவர் முடித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியிருக்கும் அமார் சிங் இதற்கு முன்னர் கோலாலம்பூர் துணைத் தலைமை போலீஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார்.