Home Featured நாடு தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியாவிற்கு ஆஸ்திரேலியா பாதுகாப்பு எச்சரிக்கை!

தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியாவிற்கு ஆஸ்திரேலியா பாதுகாப்பு எச்சரிக்கை!

827
0
SHARE
Ad

Malaysia New Years Eveகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள மாநகர காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ தாஜூடின் மொகமட் இசா, “தீவிரவாத தாக்குதல் தொடர்பாக எங்களுக்கு உளவுத்துறையில் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.”

“எனினும், கடந்த சில மாதங்களாகவே நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி நாடு மிகுந்த பாதுகாப்பு நிலையில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மற்றும் வர்த்தக இணையதளங்களில் வெளியிடப்பட்ட தகவலில், “தாக்குதல் கண்மூடித்தனமாக இருக்கும், மேற்கத்திய விவகாரங்கள் அல்லது அது தொடர்பான இடங்களில், மேற்கத்தியர்கள் தான் அவர்களின் இலக்காக இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், மலேசியாவின் கடற்கரை பிரதேசமான சபாவிற்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள் தங்களது திட்டத்தை மாற்றிக் கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.