Home 13வது பொதுத் தேர்தல் “கெடாவை மீண்டும் கைப்பற்ற தேசிய முன்னணி தயார் நிலை” – முக்ரிஸ் மகாதீர்

“கெடாவை மீண்டும் கைப்பற்ற தேசிய முன்னணி தயார் நிலை” – முக்ரிஸ் மகாதீர்

516
0
SHARE
Ad

Mukhriz-Mahathir---Sliderகோலாலம்பூர், மார்ச் 14 –  கடந்த பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தை எதிர்க் கட்சிகளிடம்  கைநழுவ விட்ட தேசிய முன்னணி, இந்த முறை அந்த மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற எல்லா நிலைகளிலும் தயாராகி வருகின்றது என துணையமைச்சரும், தேசிய முன்னணியின் அடுத்த கெடா மந்திரிபுசார் என எதிர்பார்க்கப்படுபவருமான முக்ரிஸ் மகாதீர் கூறியுள்ளார்.

முக்ரிஸ் கெடா அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவருமாவார்.

கோலாலம்பூரில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கெடா மாநிலத்தவர்களின் சந்திப்பு குறித்து அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முக்ரிஸ் இந்த தகவலைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் வெற்றியைக் கெடா மாநிலத்தில் உறுதி செய்வதற்காக, மிகவும் கவனமுடன்  தாங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து வருவதாகவும், அதில் ஏறத்தாழ 90 சதவீத வேட்பாளர்களைத் தேர்வு செய்து முடித்து விட்டதாகவும், அனைத்துலக வர்த்தக, தொழிலியல் துறையின் துணையமைச்சருமான முக்ரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது புறக்கணிக்கப்பட்ட மாநிலமாக கருதப்படும் கெடா மாநிலத்தை ஆள்பவர்கள் வெறும் வெற்று வாக்குறுதிகளைத் தான் வழங்கி வருகின்றார்கள் என்றும் முன்னாள் பிரதமர் மகாதீரின் புதல்வரான முக்ரிஸ் தெரிவித்தார்.

முக்ரிஸ் மகாதீர் எதிர்வரும் பொதுத் தேர்தலில், கெடா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவார் என்றும் அம்மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றுமானால், தேசிய முன்னணி சார்பிலான மந்திரிபுசாராக முக்ரிஸ் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.