Home சமயம் மாதா அமிர்தானந்தமயி சிங்கப்பூர் வருகிறார்.

மாதா அமிர்தானந்தமயி சிங்கப்பூர் வருகிறார்.

879
0
SHARE
Ad

Amirthanantha-mayeeமார்ச் 15 –  ஆன்மீக உலகில் அனைவராலும் ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி அவர்கள் சிங்கப்பூருக்கு வருகை புரியவிருக்கிறார்.

அங்கு அவர் இம்மாதம் (மார்ச்) 24 முதல் 26 வரை தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கவிருக்கிறார்.

இந்நிகழ்வு மெரினா பே, சேன்ட்ஸ் எக்ஸ்போ & கொன்வென்ஷன் சென்டரில், எண் 10,  ஹால் ஈ, கீழ்தளத்தில் நடைபெறும். அவரது இந்த ஆன்மீக உரை  மார்ச் 24ஆம் தேதி காலை 10 மணிக்கும், 25ஆம் திகதி காலை 10.30 மற்றும் இரவு 7.30 மணிக்கும், 26ஆம் திகதி காலை 10 மணிக்கும் இடம்பெறும். 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு தேவி பவ தர்ஷன் இடம்பெறும்

#TamilSchoolmychoice

அம்மா ஆங்கிலத்தில் உரையாற்றுவார்.

அம்மா ஆங்கிலத்தில் ஆன்மீக உரையாற்றுவார். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அம்மாவின் அன்பு மழையில் அருள் பெற  அனைவரையும் வருக வருக என  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்

முதலில் வருவோருக்கு முதல் சலுகை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவதால் வர விரும்புவோர் ஏமாற்றத்தைத் தவிர்க்க இடத்திற்கு முந்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

மேல் விபரங்களுக்கு ;மலேசிய அமிர்தீஸ்வரி அமைப்பு

தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள், கோலாலம்பூர் 010-255 5028,

ரமேஷ் கன்னா (ஜொகூர் பாரு) 016-715 2610 / 014-910 3827

சிங்கப்பூர் +658256 2654  www.amma.org.sg