Home Featured தமிழ் நாடு வைகோ வழியில் விஜயகாந்த்?

வைகோ வழியில் விஜயகாந்த்?

614
0
SHARE
Ad

கோலாலம்பூர் – :தமிழக அரசியலில் ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக துடிப்புள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்தும் மதிமுக தலைவர் வைகோவால் வளர முடியவில்லை. அவரின் கட்சியும் கரைந்து வருகிறது. இதற்குக் காரணம், அவரின், அரசியல் அணுகுமுறைதான் .

தான் வளர வேண்டும்; தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தைவிட, யார் வளரக் கூடாது; எவர் முதல்வராக வரக் கூடாது என்பதில்தான் கவனமாக இருக்கிறார். குறிப்பாக, ஸ்டாலின் முதல்வராக ஆகக் கூடாது என்பதில்தான் முழு வீச்சுடன் செயல்படுகிறார்.

vaiko,vijayakanthஏறக்குறைய, விஜயகாந்தும் இப்பொழுது வைகோவைப் போலதான் செயல்படுகிறாரோ என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

தமிழ் நாட்டு சட்டமன்றத்திற்கு பதினைந்தாவது பொது தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் வர இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று மனதார விரும்புகிறார் விஜயகாந்த்.

அப்படியானால், அவர் திமுக அணியுடன் இணைவதுதான் பொருத்தமாக இருக்கும். அதேவேளை, திமுகவுடன் இணைந்தால், திமுக பதவிக்கு வந்து விடுமே என்று தயங்குவதும் பாஜக-வுடன் சேரலாமா என்று மயங்குவதும் வைகோ-தொல்.திருமாவளவன் – ஜி.ராமகிருஷ்ணன் – முத்தரசன் ஆகியோர் கூட்டு சேர்ந்துள்ள மக்கள் நலக் கூட்டணியில் இணையலாமா என்று மதி மயங்குவதும் தொடர்ந்தால், அது ஜெயலலிதாவிற்கே வாய்ப்பாக அமையும்.

இதற்கிடையில், விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவின் பேச்சைக் கேட்பதைக் குறைத்துக் கொண்டு, சுயமாக முடிவு எடுக்க வேண்டும். விஜயகாந்திற்கு இருக்கும் 9 விழுக்காட்டு வாக்கு வங்கிக்கு ஏறக்குறைய நாற்பது இடங்கள் கிடைக்க வேண்டும் என்றால் அவர், திமுக அணியில் இணைவதுதான் பொருத்தமாக இருக்கும். இல்லாவிடில், அவரின் எதிர்காலமும் தேமுதிக-வின் எதிர்காலமும் வைகோவைப் போலவும் மதிமுக-வைப் போலவும் ஆகிவிடும்!

-செல்லியல் தொகுப்பு