Home Featured நாடு பிறப்புச் சான்றிதழில் மோசடி செய்த வங்கதேச ஆடவர் கைது!

பிறப்புச் சான்றிதழில் மோசடி செய்த வங்கதேச ஆடவர் கைது!

488
0
SHARE
Ad

handcuffகெரிக் – வேறு நபரின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்திய வங்கதேச ஆடவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அகமட் பசிர் என்ற அந்த 38 வயது ஆடவர், வேறு நபரின் பிறப்புச் சான்றிதழைக் கடந்த 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் மூலம் மலேசியாவில் அவர் பணியாற்றி உள்ளார்.

தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கட்டத் தவறும் பட்சத்தில் அவர் 2 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை குடிநுழைவுத்துறை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மலேசிய அடையாள அட்டை பெறும் நோக்கில் கடந்த 2001ஆம் ஆண்டு இறுதியில் வேறு நபரின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி விண்ணப்பித்துள்ளார் அகமட்.

முன்னதாக கடந்த 1991ஆம் ஆண்டே மலேசியாவுக்குள் சட்டப்பூர்வமாக நுழைந்துள்ளார் அவர். உள்ளூர் பெண் ஒருவரை மணந்திருப்பதாகவும், தனக்கு 4 குழந்தைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நாட்டின் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்டிருப்பதால், அகமதுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தியுள்ளார் அகமட்.