Home Featured நாடு முக்ரிசின் தோல்விக்கு மகாதீரின் செயல்பாடே காரணம்: நஸ்ரி

முக்ரிசின் தோல்விக்கு மகாதீரின் செயல்பாடே காரணம்: நஸ்ரி

582
0
SHARE
Ad

கோலாலம்பூர்-கெடா மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முக்ரிஸ் விலக்கப்பட அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான துன் மகாதீரின் செயல்பாடுகளே காரணம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தெரிவித்துள்ளார்.

Nazriஅரசியல் ரீதியில் தோல்வி அடைந்தவராக முக்ரிஸ் பார்க்கப்படுவதற்கு டாக்டர் மகாதீரின் செயல்பாடுகளே முக்கிய காரணம் என நஸ்ரி கூறியுள்ளார். “கெடா மந்திரி பெசாராக தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்னரே முக்ரிஸ் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். வழக்கமாக வேறொரு நல்ல பதவியில் அமர்வதற்காகவே தலைவர்கள் தாங்கள் ஏற்கெனவே வகித்து வரும் பதவிகளில் இருந்து விலகுவர். ஆனால் முக்ரிஸ் விஷயத்தில் அவர் விலக்கப்பட்டுள்ளார். இதனால் மகாதீர் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது” என்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் நஸ்ரி தெரிவித்தார்.

அண்மையில் அட்டர்னி ஜெனரல் அபாண்டியை விமர்சித்தும், பிரதமர் நஜிப் பதவி விலகக் கோரியும், தனது வலைப்பக்கத்தில் பதவிட்டிருந்தார் மகாதீர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதையடுத்தே முக்ரிசின் வீழ்ச்சிக்கு மகாதீரின் இத்தகைய செயல்பாடுகளே காரணம் என நஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.