Home Featured கலையுலகம் “சண்டைக் கோழி 2” படத்தால் வந்தது லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் இடையில் சண்டை!

“சண்டைக் கோழி 2” படத்தால் வந்தது லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் இடையில் சண்டை!

985
0
SHARE
Ad

vishalசென்னை – இரசிகர்களால் எளிதாக மறக்க முடியாத படம் சண்டைக் கோழி. விஷாலுக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததோடு, இயக்குநர் லிங்குசாமிக்கும் உயர்வைத் தந்த படம் சண்டைக்கோழி.

தற்போது படத்தின் இரண்டாம் பாகமாகப் படம் எடுக்கும் போக்கு பெருகிவருவதால்,  ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் மீது விஷால் ஆர்வம் காட்ட, லிங்குசாமியும் சம்மதித்தார்.

அவ்வப்போது சண்டைக்கோழி-2 குறித்த சில செய்திகள் மட்டும் வெளியாக, இரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

ஆனால், ‘சண்டகோழி 2’ கைவிடப்பட்டதாக வியாழக்கிழமை நேற்று நடிகர் விஷால் டுவிட்டரில் தெரிவித்தார். தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

linguசண்டகோழி 2 படம் கைவிடப்பட்டதற்கான காரணங்களைத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விஷாலைக் காத்திருக்க வைத்துவிட்டு, தற்போது தெலுங்கு நடிகர் அல்லூ அர்ஜூனை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி.

சுமார் ஒரு வருடமாக சண்டைக்கோழிக்காகக் காத்திருந்த விஷால், அந்தப் படத்தின் ஆரம்ப தயாரிப்பு பணிக்காக பணத்தையும் செலவு செய்திருப்பதோடு, லிங்குசாமிக்கு முன்பணமும் வழங்கியுள்ளதாகவும், அதனால் அந்தப் பணத்தை லிங்குசாமி திருப்பித் தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விஷால் கூறுகையில், “இந்தப் படத்திற்காக ஆரம்பத்தில் நான் 14 மாதங்கள் காத்திருந்தேன். இது தொடங்காததால் தான் கதகளி, மருது ஆகிய படங்களில் நடித்தேன். 15 நாட்களுக்கு முன்பு வரை லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஆரம்பிப்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லாமலேயே அவர் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டார். இதற்கான முன் தயாரிப்பு வேலைகளை நிச்சயம் 2 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருப்பார். அப்போதே என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் திரைக்கதையின் இறுதி வடிவம் குறித்து கேட்டபோது தான் அல்லு அர்ஜுனின் படம் பற்றி தகவல் தெரிவித்தார். தொழில்முறையில் இது சரியல்ல. இதற்குப் பிறகு இருவரும் இணைந்து படம் பண்ணுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். சண்டகோழி 2 தயாரிப்பாளராக முன்தயாரிப்பு வேலைகளுக்குச் செலவு செய்துள்ளேன். லிங்குசாமிக்கு முன்பணமும் அளித்துள்ளேன். இந்த நஷ்டத்தைச் சுமூகமான முறையில் தீர்க்க நினைத்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

“இது குறித்து பதிலளித்துள்ள லிங்குசாமி. இந்த சர்ச்சையில் இப்போதைக்கு நான் சிக்க விரும்பவில்லை. இந்த விஷயத்தைப் பெரிதாக்கவும் விரும்பவில்லை. எனது அடுத்த படம் அல்லு அர்ஜூனுடன்தான். எனவேதான், சண்டகோழி தயாரிப்பு கைவிடப்பட்டது” எனக் கூறியுள்ளார்.