Home Featured கலையுலகம் எஸ்.டி பாலா இயக்கத்தில் கிரிமினல் வழக்கை அடிப்படையாகக் கொண்ட புதிய படம்!

எஸ்.டி பாலா இயக்கத்தில் கிரிமினல் வழக்கை அடிப்படையாகக் கொண்ட புதிய படம்!

858
0
SHARE
Ad

S.T.Balaகோலாலம்பூர் – ஒரு வழக்கை மையமாக வைத்து முற்றிலும் நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்களையும், விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்ட மலேசியத் திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாகி ரசிகர்களை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வரவுள்ளது.

‘இட்ஸ் த மொமெண்ட் யங் ஆரிப்’ ( It’s The Moment Yang Arif) என்ற அந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளது வேறு யாரும் அல்ல, மலேசிய நாடகத்துறையில் பல வருட அனுபவம் கொண்ட இயக்குநர் எஸ்.டி.பாலா தான்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க உண்மைச் சம்பவங்களை படமாக்குவதில் தனித்துவம் மிக்கவரான எஸ்.டி.பாலா, இதற்கு முன்பு ‘கலியுகா’, ‘சம்பந்தன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இது அவரது இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது திரைப்படம்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ‘இட்ஸ் த மொமெண்ட் யங் ஆரிப்’ திரைப்படத்தின் அறிமுகவிழா கடந்த வாரம் ஸ்ரீகம்பாங்கனில் உள்ள ‘த பேலஸ் ஆஃப் கோல்டன் ஹார்சஸ்’ தங்கும்விடுதியில் நடைபெற்றது.

அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.டி.பாலா, 25 ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவில் நடந்த ஒரு கிரிமினல் வழக்கை நாளிதழ்களின் மூலமாக படித்து போது தனது மனதில் உருவான கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு நமது நாட்டிற்குத் தகுந்தாற்போல் திரைக்கதையில் மாற்றம் செய்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய காலத்தில் நீதிமன்றத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அடிக்கடி வருவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

str2_kcarif_optionB_kenneth_1அதேவேளையில், ஒரு நீதிமன்ற வழக்கை திரைப்படமாக எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படிப்பட்ட ஒரு கதையை மலேசிய நீதிமன்றத்தில் நடக்கும் கதை போல் உருவாக்க கடும் உழைப்பை கொடுத்துள்ள இயக்குநர், அதைப் படமாக்க பல சவால்களையும் எதிர்க்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

“உண்மையில் நிஜமான நீதிமன்றத்தில் திரைப்படம் எடுக்க அனுமதியளிக்கமாட்டார்கள். அதனால் பல்கலைக்கழங்களில் நீதிமன்றம் போன்ற அமைப்பை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினோம். அதிலும் கூட எங்களை அனுமதிக்க மறுத்தார்கள். இதற்கென்று தனியாக நீதிமன்ற மாதிரிகளை உருவாக்க எங்களிடம் போதிய நிதி இல்லாமல் இருந்தது” என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் எஸ்.டி.பாலா தெரிவித்துள்ளார்.

இது ஒரு மலாய் படமாகக் கூறப்பட்டாலும், இந்தப் படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் தமிழ், மலாய் மற்றும் மெண்டரின் என மூன்று மொழிகளிலும் கலந்து தான் பேசுவார்கள் என்றும் எஸ்.டி.பாலா குறிப்பிட்டுள்ளார்.

இசை 

Sundrraஇந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் எஸ்.டி.பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் சுந்தரா. அண்மையில் வெளியான படத்தின் முன்னோட்டத்திலேயே சுந்தராவின் பின்னணி இசை வியக்க வைத்துள்ளது.

படம் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்குத் தகுந்தவாறு பின்னணி இசையை மிக நுணுக்கமாக உருவாக்கியுள்ள சுந்தரா, இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது தனக்கு மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு பாடல் ஒன்றையும் சுந்தரா உருவாக்கியுள்ளார். மலாய், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள அந்தப் பாடலை பிரபல பாடகர்கள் பாடியுள்ளனர்.

நடிகர்கள் 

இந்தத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் கீனா (சூரியானா அப்துல் வாகாப்), ரோஸ் ஹசான் நடித்துள்ளனர். இவர்களோடு 40 கதாப்பாத்திரங்களில் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் மலேசிய சட்டங்களை நன்கு அறிந்த நிஜ வழக்கறிஞர்கள் பலரும் இயக்குநர் எஸ்.டி பாலாவிற்கு உதவியாக இருந்துள்ளனர்.

str2_kcarif_optionA_kenneth_1ஆகவே, விறுவிறுப்பும், திகிலும் நிறைந்த கிரிமினல் வழக்கை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஒட்டுமொத்த மலேசியர்களையும் வியக்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் மார்ச் 10-ம் தேதி முதல் மலேசியத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதோடு, இத்திரைப்படத்தை அனைத்துலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவும் எஸ்.டி.பாலாவின் ஃபினோமினா சினி புரொடக்சன்ஸ் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொகுப்பு -ஃபீனிக்ஸ்தாசன் 

படங்கள் – Fenomena Seni Produksi, Cinemaonline.asia

முன்னோட்டம்: