Home Featured நாடு இறுதிக் கட்டத்தில் மகாதீர் மீதான விசாரணை: காவல்துறை தகவல்

இறுதிக் கட்டத்தில் மகாதீர் மீதான விசாரணை: காவல்துறை தகவல்

748
0
SHARE
Ad

Datuk Seri Noor Rashid Ibrahimகோலாலம்பூர்-மகாதீர் தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மீதான இந்த விசாரணையானது முடிவுக்கு வந்த பின்னர், மேல் நடவடிக்கைக்காக அது குறித்த விவரங்கள் அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறை துணை ஐஜிபி டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமது தனிப்பட்ட வலைத்தளத்தில் மகாதீர் அவதூறான ஒரு பதிவை வெளியிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

“துணை அரசு வழக்கறிஞரிடம் விசாரணை அறிக்கையை ஒப்படைக்கும் முன்னர் அதை நன்கு அலசி ஆராய்வோம்” என்று செய்தியாளர்களிடம் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ‘சே டட்’ (CHE DET) வலைப்பக்கத்தில் மகாதீர் பதிவிட்ட சில கருத்துக்கள் அவருக்கெதிராக திரும்பியுள்ளன. இதையடுத்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இது தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.