Home Featured கலையுலகம் நடிகர் அரவிந்த்சாமியின் கணினி நிறுவனத்தில் தீ விபத்து!

நடிகர் அரவிந்த்சாமியின் கணினி நிறுவனத்தில் தீ விபத்து!

549
0
SHARE
Ad

aravindswசென்னை –  சென்னை  ஆழ்வார் பேட்டையில்  நடிகர் அரவிந்த்சாமியின் கணினி நிறுவனத்தில் ஏற்பட்ட  தீவிபத்தில்  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. சென்னை  ஆழ்வார் பேட்டை  சி.பி. ராமசாமி சாலையில் உள்ள  ஒரு மூன்று மாடி   கட்டிடத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் கணினி நிறுவனம் இயங்கி வருகிறது.

அவரது அலுவலகம் உள்ள  2 ஆவது மாடியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் கரும் புகை வெளிப்பட்டது. இதை  பார்த்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்  கொடுத்தனர்.

உடனே மாவட்ட தீயணைப்பு அலுவலர் , உதவி அலுவலர்கள் தீயணைப்பு நிலைய அதிகாரி கியோர் தலைமையில் தீயணைப்பு  படையினர் விரைந்தனர். 5 வண்டிகளில் வந்து சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

#TamilSchoolmychoice

இந்த தீ விபத்தில்,  20 கணினிகள், அலுவலகத்தில் இருந்த  பொருட்கள்   எரிந்து  சேதமானது. அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய்   என மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் இருந்த கணினி எந்திரத்தில் இருந்து ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.