Home Featured உலகம் இலங்கை கடற்படையில் இருந்து ராஜபக்சே மகன் பணிநீக்கம்!

இலங்கை கடற்படையில் இருந்து ராஜபக்சே மகன் பணிநீக்கம்!

819
0
SHARE
Ad

Yoshitha-Rajapaksaகொழும்பு – ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜபக்சே மகன், இலங்கை கடற்படையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சே.

இவர் இலங்கை கடற்படையில் லெப்டினென்ட் கர்னல் ஆக பணியாற்றி வருகிறார். இலங்கை  அதிபராக ராஜபக்சே இருந்தபோது, அதிகாரத்தை பயன்படுத்தி அவரது குடும்பத்தினர் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, ராஜபக்சே மனைவி, மகன்கள் மற்றும் தம்பிகள் மீது நீதி விசாரணை பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், ராஜபக்சே இளைய மகன் யோஷிகா மற்றும் 3 பேர் மீதும் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

அதை தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன் யோஷிதா கைது செய்யப்பட்டார். மேலும், யோஷிதா மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இலங்கை கடற்படை பணியில் இருந்து யோஷிதா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 28–ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.