Home Featured உலகம் 340 நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்துவந்த அமெரிக்க-ரஷிய வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பினர்!

340 நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்துவந்த அமெரிக்க-ரஷிய வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பினர்!

628
0
SHARE
Ad

pace-returnஅஸ்ட்டானா – விண்வெளியில் உள்ள பன்னாட்டு ஆய்வு நிலையத்தில் இருந்தபடி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளுக்கு முன்னோடியான ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறு 340 நாட்கள் விண்வெளியை சுற்றிவந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்காட் கெல்லி மற்றும் ரஷிய விண்வெளி வீரரான மிக்காயில் கார்னியென்க்கோ ஆகியோர் இன்று பூமிக்கு திரும்பினர்.

ரஷியாவுக்கு சொந்தமான சோயுஸ் விண்கலத்தின் மூலம் இன்று காலை 6.32 மணியளவில் ஸ்காட் கெல்லியும் மிக்காயில் கார்னியென்க்கோவும் விண்வெளியில் இருந்து புறப்பட்டனர். ஏற்கனவே திட்டமிட்டபடி கஜகஸ்தான் நாட்டில் உள்ள கஸக் நகரில் உள்ள ஒரு தாழ்வான பகுதியில் இன்று காலை 9.39 (மலேசிய நேரப்படி 10.36) மணியளவில் அவர்கள் வந்த விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.

அங்கு தயாராக காத்திருந்த மீட்புப் படையினர் அவர்களை ஆசுவாசப்படுத்தி, பூமிக்கு வரவேற்றனர். அமெரிக்க விண்வெளி ஆய்வுப் பயணத்தில் இந்த 340 நாள் விண்வெளிப் பயணம், அமெரிக்காவின் நெடுநாளைய விண்வெளிப் பயணத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.