Home Featured கலையுலகம் நேயர்களின் ஆசைகளை நிறைவேற்றும் மின்னலின் ‘ஆசை ஆசையாய்’ நிகழ்ச்சி!

நேயர்களின் ஆசைகளை நிறைவேற்றும் மின்னலின் ‘ஆசை ஆசையாய்’ நிகழ்ச்சி!

778
0
SHARE
Ad

12778919_10201244746598550_6731863648350681988_oகோலாலம்பூர் – கருத்துள்ள வரிகள் கொண்ட பாடல்கள், நேயர்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல அரிய தகவல்கள், உறவுகளுக்கு இடையிலான பாசப் போராட்டங்களையும், உணர்வுகளையும் சொல்லும் வகையில் பல நாடகங்கள், காதில் தேனூற தமிழ் பேசும் பல அறிவிப்பாளர்கள் என மின்னல் பண்பலை தனது தனித்துவமான நிகழ்ச்சிகளால் மலேசிய மக்களின் உள்ளம் கவர்ந்த ஒரு வானொலியாகத் திகழ்ந்து வருவதை அறிவோம்.

நேயர்கள் ஆசையாய் கேட்கும் பாடல்களை ஒலிபரப்பி வந்த மின்னல், இப்போது ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ தொகுப்பில் வரும் ‘ஆசை ஆசையாய்’ அங்கம் மூலமாக நேயர்களின் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது.

12764443_10201244753998735_670307387042800317_oகடந்த ஜனவரி மாதம் முதல், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமைகளில், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ நிகழ்ச்சியில் இந்த ‘ஆசை ஆசையாய்’ அங்கம் இடம்பெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

ஆறு வாரங்களைக் கடந்துவிட்ட இந்நிகழ்ச்சியில், திரையரங்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்ட நேயர் ஒருவரின் ஆசை நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக, கேஎல் கோபுரத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நேயர் ஒருவரின் ஆசையும் நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக, ஒவ்வொரு வாரமும் நேயர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி வருகின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளரான பிரேமா கிருஷ்ணன், அறிவிப்பாளர்கள் லோகேஸ்வரி கணேசன் மற்றும் சரஸ்வதி கண்ணியப்பன்.

இன்று புதன்கிழமை பிற்பகல் ஒலியேறிய ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ நிகழ்ச்சியில், சின்னசாமி – ஜெயா தம்பதியினரின் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைவேற்றப்பட்டது குறித்த சுவையான அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

12771520_10201244746398545_4611429735916637984_oதிருமணமாகி 41 வருடங்களைக் கடந்துவிட்ட அத்தம்பதி, ஜோடியாகப் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது ஆசையை மின்னலிடம் தெரிவிக்க, ‘மொமெண்ட் ஸ்டில்ஸ் – Moment Stills’ என்ற நிறுவனத்தின் நிர்வாகியும், புகைப்படக் கலைஞருமான ரவி பிரகாஷ், அத்தம்பதியரை தலைநகரிலுள்ள லேக் கார்டன் பூங்காவிற்கு அழைத்துச் சென்று விதவிதமான புகைப்படங்களை எடுத்து அசத்திவிட்டார்.

தங்களது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அத்தம்பதியின் முகத்தில் ‘மின்னல்’ எனப் புன்னகை பூத்துள்ளது.

சரி.. இது போல் உங்களின் சின்னச் சின்ன ஆசைகளும் நிறைவேற வேண்டுமா? இதோ இந்த மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் minnalfmrtm@gmail.com அல்லது prema_mfm@hotmail.com.

அல்லது மின்னல் பண்பலைக்கு கடிதம் மூலமாகவோ, தொலைப்பேசி மூலமாகவோ உங்களது ஆசைகளைத் தெரிவிக்கலாம்.

தொகுப்பு – ஃபீனிக்ஸ்தாசன்