Home Featured தமிழ் நாடு 7 தமிழரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும் – கருணாநிதி

7 தமிழரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும் – கருணாநிதி

587
0
SHARE
Ad

karunanidhiசென்னை – ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

rajivகடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இந்த ஏழு பேரும், ஏறத்தாழ இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை தமிழக அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் இவர்களது விடுதலை தள்ளிப்போனது.

#TamilSchoolmychoice

தற்போது, தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கருணாநிதி கூறியுள்ளார்.