Home Featured இந்தியா நாங்கள் தவறே செய்யாதவர்கள் அல்லர் – ராகுல் காந்தி விளக்கம்!

நாங்கள் தவறே செய்யாதவர்கள் அல்லர் – ராகுல் காந்தி விளக்கம்!

570
0
SHARE
Ad

rahul_gandhiபுதுடெல்லி – இன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் தவறே செய்யாதவர்கள் அல்லர்; நாங்களும் தவறு செய்பவர்கள்தாம் என்று கூறியுள்ளார்.

எனினும், உங்களுக்கும் எங்களுக்குமான வேறுபாடு எங்கள் தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்கிறோம். நீங்கள் அவற்றைத் தவறு என்றே ஒப்புக் கொள்வதில்லை என்றார்.

மேலும், “காந்தி எங்களைச் சேர்ந்தவர்; சாவர்க்கர் உங்களைச் சேர்ந்தவர்” என ராகுல் பேசிய போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் பாஜகவினர் கூச்சல் எழுப்பினர்.

#TamilSchoolmychoice

இதைச் சாதகமாக்கிக் கொண்ட ராகுல், “சாவர்க்கர் உங்களைச் சேர்ந்தவர் இல்லையா? அவரைத் தூக்கி எறிந்து விட்டீர்களா?” என்று கேள்ளி எழுப்பினார்.