வாஷிங்டன் – அமெரிக்காவில் புற்றுநோய் மருந்தை பெரிய அளவு குப்பிகளில் மருந்து நிறுவனங்கள் அடைத்து விற்பதால் ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி டாலர் மதிப்பிலான புற்றுநோய் மருந்து வீணாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆயிரக்கணக்கான டாலர் விலை கொண்ட இந்த மருந்தை புற்றுநோயாளிகளுக்கு ஊசி மூலம் செவிலியர்கள் செலுத் துகின்றனர். அவ்வாறு செலுத்தும் போது ஒவ்வொரு நோயாளிக்கும் எவ்வளவு மருந்து தேவையோ அதை மட்டுமே குப்பியில் இருந்து எடுக்கின்றனர். எஞ்சிய மருந்தை பாதுகாப்பு காரணங்களுக்காக செவலியர்கள் மீண்டும் பயன் படுத்துவதில்லை.
அதை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டு விடுகின்றனர். இந்நிலையில் இந்த மருந்து பெரும்பாலும் தேவைக்கு அதிக மாகவே இருப்பதால் அமெரிக்கா வில் ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி டாலர் மருந்து வீணாவதாக மருத்துவ இதழ் ஒன்றில் ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.
மெமோரியல் ஸ்லோவன் கெட்டரிங் புற்றுநோய் மையத் தைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறும்போது, “மருந்து நிறுவனங்கள் சிறிய குப்பிகளிலும் மருந்தை அடைத்து விற்றால் செவிலியர்கள் சரியான அளவை பயன்படுத்துவதன் மூலம் மருந்து வீணாவது குறையும். ஆனால் 100 சதவீத நோயாளி களுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரே அளவு (பெரிய அளவு) குப்பிகளில் மருந்தை அடைத்து விற்கின்றனர்.
இதனால் நோயாளிகள் தேவைக்கும் அதிக மாக மருந்தை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதன் மூலம் மருந்து நிறுவனங்கள் ஓசையின்றி கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன” என்று தெரிவித்தனர்.