‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன், அடுத்து ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தை இயக்கினார். விரைவில் அப்படம் திரைக்கு வருகிறது. அதையடுத்து அவர் இயக்கும் படம்தான் ‘ ஆண்டவன் கட்டளை’.
விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தை விநியோகஸ்தர் அன்பு செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் 7-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments