எதிர்வரும் மார்ச் 17ஆம் தேதிக்குள் மஇகா மற்றும் அதன் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தரப்பிலான எதிர்வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்திற்குள் வாதிகள் தரப்பிலான பதில்கள் வழங்கப்படவேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறுவதற்கும் நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.
சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவுகள், வழங்கிய கடிதங்கள் ஆகியவை தொடர்பில் பழனிவேல் தரப்பினர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.