Home Featured இந்தியா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுரங்கப்பாதை! எல்லையில் தீவிரவாதிகள் சதி!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுரங்கப்பாதை! எல்லையில் தீவிரவாதிகள் சதி!

656
0
SHARE
Ad

tunnel_3புதுடெல்லி – ‘ஜம்மு-காஷ்மீர்’ மாநில எல்லையில், தீவிரவாதிகள் ஊடுருவதற்கு ஏற்ற வகையில் 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை தோண்டப்பட்டிருப்பதை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர், சுரங்கப்பாதையின் ஒரு முனை இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த சுரங்கப்பாதையின் மறுமுனை, பாகிஸ்தானில் இருந்து தொடங்குவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.