Home Featured கலையுலகம் விஜய்யின் ‘தெறி’ படத்தில் பாடல் பாடிய டி.ஆர்.ராஜேந்தர்!

விஜய்யின் ‘தெறி’ படத்தில் பாடல் பாடிய டி.ஆர்.ராஜேந்தர்!

737
0
SHARE
Ad

theri_trajendar_432016_mசென்னை – விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்தில் ஒரு குத்துப் பாட்டை டி.ஆர். பாடியுள்ளாராம்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை மூன்று மணி நேரத்தில் டி.ராஜேந்தர் பாடி முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் பதிவின்போது, அட்லியும் கூடவே இருந்துள்ளார். ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் டி.ஆரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டின் போது டி.ஆர். பேசிய ஆவேசமான பேச்சு அனைவரையும் ரசிக்க வைத்தது.

#TamilSchoolmychoice

அந்த விழாவில் அவருடைய பேச்சுதான் மிகவும் சிறப்பாக இருந்தது. ‘புலி’ யைப் பற்றி அடுக்கு மொழியில் அவர் பேசிய வசனங்கள், விஜய்யை இருக்கையில் அமரவிடாமல் மேடைக்கே இழுத்தது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ‘தெறி’ இசை விழாவிற்கு வந்து தெறிக்கவிடுவாரா டி.ஆர். என்பதை பார்போம்.