Home Featured இந்தியா 7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து ஜெயலலிதாவின் உருவ படம் கர்நாடகாவில் எரிப்பு!

7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து ஜெயலலிதாவின் உருவ படம் கர்நாடகாவில் எரிப்பு!

734
0
SHARE
Ad

banglore_jayaபெங்களுர் – ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து பெங்களுருவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு, மத்திய அரசிற்கு கடிதம் எழுதியது.

தமிழக அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் ஒருப்பபகுதியாக பெங்களூருவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் இடுபட்டனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், அவரது உருவபடத்தையும் எரித்தனர்.