Home Featured நாடு மொகிதின் அளிக்கும் புகாரை ஆர்ஓஎஸ் முறைப்படி விசாரிக்கும் – சாஹிட் உறுதி!

மொகிதின் அளிக்கும் புகாரை ஆர்ஓஎஸ் முறைப்படி விசாரிக்கும் – சாஹிட் உறுதி!

573
0
SHARE
Ad

zahid-muhyiஜாசின் – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பதவி இடைநீக்கம் குறித்து சங்கப்பதிவிலாகாவிடம் (ஆர்ஓஎஸ்) புகார் அளிக்கும் பட்சத்தில், அவர்கள் முறைப்படி அதனை விசாரணை செய்வார்கள் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

சங்கப்பதிவிலாகா என்பது அரசாங்கத்தைச் சேர்ந்தது என்பதோடு, முறைப்படி நடத்தப்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டுள்ள சாஹிட், முன்னாள் தலைவர்கள் உட்பட எந்த ஒரு தனிநபரின் புகாரையும் நிபுணத்துவ முறையில் விசாரணை செய்யும் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.

“அம்னோ உச்ச மன்றத்தால், மொகிதினுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து சங்கப்பதிவிலாகாவே பரிசீலனை செய்யட்டும்”

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தில் ஆர்ஓஎஸ் எந்த ஒரு பயமும், பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றேன். புகார் தரும் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று சாஹிட் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.